ரயில் நிலைய 15 அடி பள்ளத்தில் விழுந்த பெண் பயணி மீட்பு

ரயில் நிலையத்தில்15 அடி பள்ளத்தில் விழுந்த பெண் பயணியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்;

Update: 2023-12-11 02:49 GMT

பள்ளம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரூ. 24 கோடியில் நிலைய விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மதியம் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து முதல் நடைமேடை வழியாக சென்ற 50 வயது பெண்மணி ஒருவர் அங்கே வெட்டப்பட்டிருந்த 15 அடி பள்ளத்தில் தடுமாறி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஓடிச் சென்று அவரை தூக்கியதால், காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் கூறுகையில், உடனடியாக ரயில்வேத்துறை விசாரணை மேற்கொண்டு, பணிகளில் தனி கவனம் செலுத்திடவேண்டும். ரயில் நிலையம், அழகு படுத்தப்படுவது மகிழ்ச்சி, அளிக்கின்ற தருவாயில், பொதுமக்கள், பெண்கள் ,முதியோர் ,குழந்தைகள் அதிகமாக கூடுவதால், கட்டுமானப்பணியின்போது, இது போன்று பாதுகாப்பு இல்லாமல், குழிகளை வெட்டி வைப்பது, எந்தவித அறிவிப்பு பலகையும், தடுப்பு பணிகளும் இல்லாமல், செய்வது மிகவும் ஆபத்தானது, எனவே, ரயில்வே துறை பொறியாளர்கள், கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News