சங்கரன்கோவில் அருகே மது விற்ற பெண் கைது

சங்கரன்கோவில் அருகே மது விற்ற பெண் கைது செய்யப்பட்டு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-02 05:56 GMT
காவல்துறை 
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பனையூர் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருவதாக கரிவலம் வந்த நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சென்ற கரிவலம் வந்த நல்லூர் எஸ்ஐ சூசை பாண்டியன் சோதனை நடத்தியதில் மது விற்ற பனையூர் சேர்ந்த பாண்டி என்பவரின் மனைவி வள்ளியம்மாள் (50) வளைத்து பிடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் இதனால் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News