திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தீ குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்கும் முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-04-29 11:25 GMT

 திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் காலை மனு கொடுக்க பலர் வந்திருந்தனர். நாடாளுமன்ற தேர்தல் என்பதால் பொதுமக்கள் மனுக்களை போடுவதற்கு ஏதுவாக புகார் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. இதில் பலரும் கோரிக்கை மனுக்களை போட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று மனுவுடன் வந்த ஒரு பெண் திடீரென தீக்குளிக்க முயன்றார். இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த பெண் காளிபாளையம்புதூர் ஜி.என். கார்டனை சேர்ந்த ஜெயந்ரா என்பதும், அவர் திருமுருகன் ரியல் எஸ்டேட் மூலம் ரூ.13.50 லட்சத்திற்கு வீடு வாங்கியதாகவும், அதற்காக முன்பணமாக ரூ.3.35 லட்சம் கொடுத்தாகவும், மேலும், இதுவரை 28 மாதமாக மாதத்திற்கு ரூ.13 ஆயிரத்து 500 வீதம் ரூ.3 லட்சத்து 78 ஆயிரம் கொடுத்தாகவும், ஆனால் இதுவரை வீடு கிரையம் செய்துகொடுக்கவில்லை. மேலும், கூடுதலாக பணம் கேட்டும் மிரட்டி வருகிறார்கள். எனவே வீட்டை எனக்கு கிரையம் செய்துகொடுக்க வேண்டும் என தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்து, அனுப்பிவைத்தனர்.

Tags:    

Similar News