பாரம்பரிய வள்ளி - கும்மி நடனமாடிய பெண்கள்
வெள்ளோட்டில் நடந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாரம்பரியமான வள்ளி - கும்மி நடனமாடினர்.;
Update: 2023-12-13 07:51 GMT
வெள்ளோட்டில் நடந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாரம்பரியமான வள்ளி - கும்மி நடனமாடினர்.
தமிழகத்தின் மேற்கு மாவட்டத்தின் 2000 ஆண்டு பழமையான பாரம்பரிய கலையாக போற்றப்படுவது வள்ளி கும்மி ஆட்டம். ஈரோடு மாவட்டம் வெள்ளோடு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் , ஆண்கள் ஒரே இடத்தில் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். வள்ளி - கும்மி ஆட்டத்தில் ஆர்வமுள்ள பெண்கள் சுமார் ஒரு மாத காலம் பயிற்சி பெற்று , ஓரே வண்ண ஆடை அணிந்து இன்று தனது நடனத்தை அரங்கேற்றினர் . இதில் ஆறு வயது முதல் 60 வயது வரையிலான ஆயிரத்திற்க்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் இணைந்து நடனமாடி அசத்தினர் . ஆறு வகையான நிலைகள் தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கு மேலாக இந்த வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது .இந்த நடனத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.