தபால் வாக்கு செலுத்திய மகளிர் போலீசார் !
மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி தேர்தல் பணிக்கு வந்திருந்த போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்.
By : King 24x7 Angel
Update: 2024-04-13 08:52 GMT
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் தபால் வாக்குகளை செலுத்தியதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு. 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி ஜனநாயக கடமையாற்றிய பெண் போலீசார் தங்கள் கைகளில் வாக்களித்ததன் அடையாளமாக விரல்களில் வைக்கப்பட்ட மைய்யை உயர்த்தி காண்பித்து 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தல் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு தினத்தன்று தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் மற்றும் தேர்தல் நுண்பார்வையாளர்கள் தபால் வாக்கு செலுத்துவதை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி பார்வையிட்டார். மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளியூரில் இருந்து பணியாற்றும் டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் போலீசார் ஏராளமானோர் தபால் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினர். பெண் போலீசார் வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையாற்றியதன் அடையாளமாக கைகளில் வைக்கப்பட்ட மையுடன் ஒற்றை விரலை காண்பித்து அனைவரும் 100% வாக்களிக்க வலியுறுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தபால் வாக்குகள் செலுத்த வந்த அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் திருவிழாவில் 100% வாக்களிக்க வேண்டும் என்று முத்திரையிடப்பட்ட பைகளை தேர்தல் வட்டாட்சியர் விஜயராகவன் வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செல்வம், துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்