ஏரல் அருகே கண்ணில் கறுப்புத் துணி கட்டி பெண்கள் நூதன போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே செங்கல் சூலைகள் மணல் அள்ளுவதை தடுக்க கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா சிவராம மங்கலம் கிராமத்தில் தாமிரபரணி ஆற்று படுகை பகுதிகளில் செங்கள் சூலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த செங்கல் சூளைகள் ஆற்றுப் படுகையில் திருட்டுத்தனமாக மனல் அள்ளியதன் காரணமாக தாமரபரணி ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டு சிவராமங்கலம் கிராமத்திற்குள் பிள்ளையார் கோவில் தெரு பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்தது .
இதன் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் இடிந்ததுடன் கிராம மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டனர் மேலும் அந்தப் பகுதியில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு நோய் காரணமாக மூன்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கண்களில் கருப்பு துணி கட்டி பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உடைபட்ட ஆற்றங்கரை பகுதியை சரி செய்ய வேண்டும் மழை வெள்ளம் புகுவதற்கு காரணமாக இருந்த செங்கல் சூளையை அகற்ற வேண்டும் சுகாதார சீர்கேட்டை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.