டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்கள் திடீர் போராட்டம்

சாத்தூர் அருகே புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் திடீரென போராட்டம் செய்தனர்.

Update: 2024-01-06 03:24 GMT

சாத்தூர் அருகே புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் திடீரென போராட்டம் செய்தனர்.  

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் சிப்பிப்பாறை கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பாக புதிதாக அரசு மதுபான கடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சிப்பிப்பாறை கிராம பொதுமக்கள் அரசு மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று சிப்பிப்பாறை கிராமத்தில் புதிதாக அரசு மதுபான கடை திறக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று புதிதாக அரசு மதுபான கடை திறக்கப் பட்டதை அறிந்த பொது மக்கள் சிப்பிப்பாறை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பாக 50க்கு மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு மதுபான கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்துவதை அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த ஏழாயிரம்பண்ணை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News