பொன்னேரி அருகே குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம்

பொன்னேரி அருகே குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம் செய்தனர்.

Update: 2024-03-05 14:46 GMT

பொன்னேரி அருகே குடிநீர் வழங்க கோரி பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம் செய்தனர்.



பொன்னேரி அருகே கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறி பெண்கள் காலி குடங்களுடன் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கடப்பாக்கம் ஊராட்சியில் சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மிக்ஜாம் புயல் தாக்கத்திற்கு பிறகு இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே கடற்கரைக்கு அருகில் உள்ளதால் ஊராட்சியில் உவர்ப்பு நீராக மாறிய நிலையில் ஆழ்துளை மோட்டார்களும் அவ்வப்போது பழுதடைந்து கடந்த 1மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த போது பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் தற்போது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் கலைந்து செல்கின்றோம்.

விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரிய அளவில் மக்களளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்து விட்டு சென்றனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News