50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல்!

கந்தர்வக்கோட்டை பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் .

Update: 2024-03-22 08:46 GMT
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா வெள்ளாள விடுதி ஊராட்சி ஆதிதிராவிடர் நல தெருவில் சுமார் 200கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வராமல் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும் சிரமம் அடைந்து வந்துள்ளனர். இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 50கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கந்தர்வக்கோட்டை கறம்பக்குடி சாலை வெள்ளாள விடுதி பேருந்து நிறுத்தம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த கந்தர்வக்கோட்டை காவல் துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News