பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் !
திண்டுக்கல் வெங்காயம் மண்டியில் வேலைக்கு ஆட்கள் வர வேண்டாம் என்று கூறியதால் பெண்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-10 09:47 GMT
தர்ணா போராட்டம்
திண்டுக்கல் பைபாஸ் பகுதியில் உள்ள தரகு மண்டி வர்த்தக சங்க வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் வெங்காய பேட்டையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். கை பார்த்தல் (தரம் பிரித்தல்) வேலைக்கு வரவேண்டாம் என்று நிர்வாகிகள் கூறியதால் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.