பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் மகளிர் தின விழா
பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் மகளிர் தின விழா;
By : King 24x7 Website
Update: 2024-03-09 12:38 GMT
பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் மகளிர் தின விழா
நாமக்கல் (கி) மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மற்றும் வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய குழுவின் தலைவருமான கே.பி. ஜெகநாதன் ஆகியோர் ஆலோசனையின் படி, மகளிர் தினத்தை முன்னிட்டு, பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியளர்களுக்கு, வார்டு பெண் கவுன்சிலர்கள் அனைவருக்கும் பேரூராட்சி மன்ற தலைவர் அ.சுப்ரமனியம் சால்வை அணிவித்து, மதிய உணவு வழங்கி, வாழ்த்துகள் தெரிவித்தார். இந்நிகழ்வில் செயல்அலுவலர் மகேஷ்வரி, கவுன்சிலர்கள் கீதா, கீதா, உஷாராணி, பானுமதி, தனபால், கிருஷ்ணமூர்த்தி, ஜனார்த்தனன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.