சேந்தமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா
சேந்தமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 08 - 03- 2024 அன்று மகளிர் தின விழா மற்றும் நுண்கலை மன்ற பரிசளிப்பு விழா கல்லூரி முதல்வர் முனைவர் தி.பாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் அ.பிரிசிலா ஜெயக்குமாரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிரின் சாதனைகள் மற்றும் மகளிர் மேம்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் நுண்கலை மன்றத்தின் சார்பில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மகளிர் மேம்பாட்டு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஞா.கலையரசி, இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.கவிதா , துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் க. மீனா, நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ. பிரியங்கா, கணிதவியல் துறை இணைப் பேராசிரியர் வா.செந்தில்குமரன், உடற்கல்வி இயக்குனர் மொ. ரவி , கணினி அறிவியல் துறைத் தலைவர் ஏ. பிரதாப் சக்கரவர்த்தி, கணிதத் துறைத்தலைவர் முனைவர் எ.வெங்கடேசன், ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் மு.சத்யராஜ் , தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் மு.ராஜசேகர், வணிகவியல் துறை முனைவர் சக்திவேல் மற்றும் பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.