அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் மகளிர் தின விழா
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடுஹெல்த் துறை சார்பில் மகளிர் தினம் வெகு விமர்சையாக கொண்டாட்டப்பட்டது.
Update: 2024-03-11 10:22 GMT
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. துறையின் டீன் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி வளாகத்தில் பெண்களை சிறப்பிக்கும் வகையில் மகளிர் தின லோகோ வடிவமைக்கப்பட்டது. அதன் உள்ளே கல்லூரியில் பணிபுரியும் பெண் பேராசிரியைகள், அலுவலக பெண் ஊழியர்கள் பெயர் எழுதப்பட்டு இருந்தது. அதனை சுற்றி அனைத்து பேராசிரியைகள், பெண் ஊழியர்கள் நின்று சின்ன வடிவமைப்பை அமைத்தனர். ஏற்பாடுகளை துறையின் அனைத்து பேராசிரியர்களும் செய்து இருந்தனர்.