திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா
திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-10 14:34 GMT
மகளிர் தின விழா
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பெண் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு கலகலப்பாக மகளிர் தின விழாவை சிறப்பித்தனர்
மேலும் பல்வேறு போட்டிகள் நடத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் சமூக நல அலுவலர் விஜயலட்சுமி மைய நிர்வாகி சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது