பட்டுக்கோட்டையில் மகளிர் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படுமா...?

பட்டுக்கோட்டையில் ஓய்வூதியர் சங்கம் நடந்த மகளிர் தின விழாவில், மகளிர் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-03-11 09:24 GMT

  பட்டுக்கோட்டையில் ஓய்வூதியர் சங்கம் நடந்த மகளிர் தின விழாவில், மகளிர் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் பட்டுக்கோட்டை வட்டக்கிளை சார்பில், உலக மகளிர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மா. நளினி தலைமை வகித்தார். பு.வடிவக்கரசி வரவேற்றார். ஓய்வுதியர் சங்க வட்டத் தலைவர் கண.கல்யாணம் நோக்க உரையாற்றினார். க.கிருஷ்ணமூர்த்தி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். நா.மீனாட்சி, அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் த.சு.கீதா, கவிஞர் க.சுமித்ரா சத்தியமூர்த்தி, எழுத்தாளர் பிரதீபா சந்திரமோகன், தமுஎகச மாவட்டக் குழு உறுப்பினர் சொ.சரிதா ஆகியோர் வாழ்த்திப் பேசினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி சிறப்புரை ஆற்றினார் .நிறைவாக வட்ட துணைத்தலைவர் த.சந்திர மோகன் நன்றி கூறினார். 

இக்கூட்டத்தில், பட்டுக்கோட்டையில் பெண்களுக்கு என தனியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News