பல லட்சம் மோசடி செய்த மகளிர் குழு தலைவி - உறுப்பினர்கள் எஸ்பியிடம் புகார்

தங்கள் பெயரில் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த மகளிர் குழுவின் தலைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகளிர் குழு உறுப்பினர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Update: 2024-06-27 08:01 GMT

புகார் அளிக்க வந்த பெண்கள் 

 மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி அடுத்துள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் வசிக்கக்கூடிய பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவி குழுக்களை அதே கிராமத்தைச் சேர்ந்த ராணி என்பவர் உருவாக்கியுள்ளார். 2023 ஆண்டு ஒவ்வொரு உறுப்பினருக்கும் 50,000 ரூபாய் வரை தேவை படுவோருக்கு நிதி நிறுவனங்கள் வாயிலாக கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட பெண்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக ராணி மாறிப்போனர்.

உள்ளூரை  சேர்ந்தவர் என்பதால் ராணியிடம் சொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆதார், பான் கார்டு, ஏடிஎம் கார்டு, வங்கி பேங்க் பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து வைத்துள்ளனர். சொக்கம்பட்டியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களை வைத்து தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் உதவியுடன் ராணி பல இலட்ச ரூபாய் கடன் பெற்றுக் கொண்டு உள்ளார். கடனை ராணி கட்டாத காரணத்தால் நிதி நிறுவன ஊழியர்கள் சொக்கம்பட்டி கிராம பெண்களிடம் கடனை கட்டுமாறு நிர்பந்தம் செய்யும் பொழுது தான் ராணியினால் தாங்கள் ஏமாந்தது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

மேலும், வசூல் செய்ய வந்த நிதி நிறுவன ஊழியர்கள் தகாதவார்த்தைகளில் பெண்களை பேசுவதும் மிரட்டுவதுமாக இருந்தது. இதனிடையே சொக்கம்பட்டி கிராமத்திலிருந்து ராணியும், அவரது கணவர் ரவியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெயரில் பல்வேறு நிதி நிறுவனம் மூலம் 2.5கோடி வரை பணத்தை பெற்றுக்கொண்டு தலைமுறையாகி விட்டார்கள். கடன் மோசடியால் ஏமாற்றமடைந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனுவை அளித்தனர். மதுரை அருகே மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சொக்கம்பட்டி கிராமத்தில் உள்ள படிப்பறிவு இல்லாத பெண்களை குறி வைத்து ஏமாற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News