19 பேருக்கு பட்டா வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடியில் 19 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். ;
By : King 24x7 Angel
Update: 2024-03-05 07:27 GMT
பட்டா
தமிழக அரசு பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வருகிறது. அதில் வருவாய் துறை முக்கியமான துறையாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக அரசு இடங்களில் குடியிருப்பவர்களுக்கு மாவட்டத்தின் சூழ்நிலைகள் மற்றும் இடத்தின் தன்மை கருதி குடியிருப்பவர்களுக்கு அரசு சட்டதிட்ட விதிகளுக்குட்பட்டு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கயத்தாறு தாலுகா, காட்டுநாயக்கன்பட்டி அருகில் உள்ள எட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி 20 ஆண்டுகளாக அரசுக்கு வைத்த கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து 19 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.