வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் பிரிக்கும் பணி தீவிரம்...

தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் இரண்டாம் கட்டமாக பிரிக்கும் பணி நடைபெற்றது.

Update: 2024-04-09 11:30 GMT

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் பிரிக்கும் பணி தீவிரம்

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தருமபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அருணா ரஜோரியா மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி ஆகியோர் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் (Randomization) இரண்டாம் கட்டமாக பிரிக்கும் பணிகளை இன்று (09.04.2024) மேற்கொண்டனர். உடன் வாக்குப்பதிவு இயந்திர பெறுப்பு அலுவலர் தேன்மொழி,, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரகாசம், தனி வட்டாட்சியர்கள் (தேர்தல்) அசோக்குமார், வெங்கடேசன் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News