வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது

தஞ்சாவூரில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-14 15:06 GMT

பைல் படம்

தஞ்சாவூரில் காவல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூரிலுள்ள காவல் கட்டுப்பாட்டு அறையிலுள்ள 100 என்கிற தொலைபேசி எண்ணுக்கு ஜூன் 11 ஆம் தேதி மாலை அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் பழைய பேருந்து நிலையம், மேல வீதியிலுள்ள சிற்றுண்டி, நாலுகால் மண்டபம் பகுதியிலுள்ள இல்லம் ஆகியவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறினார். இதையடுத்து, மேற்கு காவல் நிலையத்தினர் தொடர்புடைய இடங்களில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினருடன் இணைந்து சோதனை நடத்தினர். இதில், வெடிகுண்டு இல்லை என்பது தெரிய வந்தது. பின்னர், அழைப்பு வந்த கைப்பேசி எண் மூலம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். 

இதில், அவர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கலைஞர் நகரைச் சேர்ந்த தர்மராஜ் மகனான கூலித் தொழிலாளி நவரெத்தினம் (37) மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து நவரெத்தினத்தை வியாழக்கிழமை கைது செய்தனர்.

Tags:    

Similar News