குடும்பத்தகராற்றில் தொழிலாளி தற்கொலை

திருவையாறு பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-05-19 12:40 GMT

தற்கொலை

திருவையாறு அருகே நடுக் கடை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோக்(40). கூலி தொழிலாளி இவரது மனைவி.வடிவுக்கரசி (37) இவர்களுக்குகிரிதரன் (5), மகிந்தரன் என்ற 10 மாத குழந்தை உள்ளது. கணவர்அசோக் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவிவடிவுக்கரசியிடம் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வீட்டில் மனைவியிடம் சண்டைபோட்டு வந்தவர் குடிப்பதற்கு பணம் இல்லாததால் அவருக்கு சொந்தமான டூவீலரை அடமானம் வைத்து குடித்துள்ளார்.

Advertisement

இதனால் மனைவி கணவரிடம் டூ வீலரை அடமானம் வைத்து ஏன் குடிக்கிறாய் என்று திட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம்இரவு தனது மாடி வீட்டில் துாக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டார். இதுகுறித்து இறந்த அசோக் கின் மனைவி வடிவுக்கரசி திருவையாறு போலீ சில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News