கூலித் தொழிலாளி தற்கொலை
மாரண்டஅள்ளி அருகே பாறை கொட்டாய் பகுதியில் கூலி தொழிலாளி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-06-07 06:30 GMT
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாரண்டஅள்ளி அருகே பாறைக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மணி லாரி டிரைவரான இவர், கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தார்.
அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதில் மனம் உடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். உயிருக்கு போராடியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மணி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாரண்டஅள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.