காவல்துறை மீது தொழிலாளி புகார்
தன்னை தாக்கி, தனது மகளுக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் மீது புகார் தெரிவித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என மூலனூரை சேர்ந்த தொழிலாளி புகார் தெரிவித்துள்ளார்.
மூலனூர் பகுதி சேர்ந்த தொழிலாளியின் மனைவி இறந்து விட்ட நிலையில் தனது 14 வயது மகள் 10 வயது மகனுடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் பன்றி வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் 3 பேர் சேர்ந்து தன்னை தாக்கியதாக கூறி தாராபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சை சேர்ந்தார்.மேலும் அந்த 3 பேரும் சேர்ந்து தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் தொடர்ந்து தனது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் கூறினார்.
அப்போது மூலனூர் போலீஸ் விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை 3 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தொழிலாளி புகார் கூறி வருகிறார். இதனிடையே தொழிலாளியை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு தாராபுரம் மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். ஆனால் அந்த தொழிலாளி ஆஸ்பத்திரியிலே இருந்து வருகிறார். மேலும் இது பற்றி தேசிய குழந்தைகள் நல ஆணையத்திற்கு புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.