தொழிலாளி விபத்தில் பலி!

நெமிலி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி விபத்தில் உயிரிழந்தார்.;

Update: 2024-03-21 05:39 GMT

  நெமிலி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி விபத்தில் உயிரிழந்தார். 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த மானாமதுரை கிராமம் பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 46). கூலித் தொழிலாளியான இவர் தனது மாமியார் ஊரான பள்ளிப்பட்டறையில் இருந்து ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக மோட்டார்சைக்கிளில் பனப்பாக்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் உள்ள பெருவளையம் மின் அலுவலகம் அருகே சென்றபோது, அந்த வழியாக முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த தென்மாம்பாக்கத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் மீது எதிர்பாராதவிதமாக அவரின் மோட்டார்சைக்கிள் மோதி கீழே விழுந்தார்.

Advertisement

அதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும்,முனியாண்டி படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நெமிலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மோட்டார்சைக்கிள் மோதி காயம் அடைந்த முனியாண்டியை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News