மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி பலி

ஏற்காட்டில் மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-06-20 14:22 GMT
மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி பலி

பலி 

  • whatsapp icon

ஏற்காடு பெரியேரிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் ஆண்டி (வயது 41). தோட்ட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் நல்லூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது, ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது.

நல்லூர் பகுதியில் ஆண்டி சென்றபோது, அங்கு மின்கம்பத்தில் இருந்து மின்சார கம்பி திடீரென அறுந்து ஆண்டி மீது விழுந்தது. இதில், மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கிவீசப்பட்டார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே தொழிலாளி ஆண்டி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News