மதுபோதையில் தவறி விழுந்த தொழிலாளி பலி!

செய்யாறு அருகே மதுபோதையில் தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் ‌.

Update: 2024-04-08 10:32 GMT
பலி
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா வடமாவந்தல் கிராமத்தை சேர்ந்த கருணாகரன் (வயது 36) மது போதையில் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் கருணாகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தூசி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News