தொழிலாளி தற்கொலை காவல்துறையினர் விசாரணை
பாகல்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-05-14 06:09 GMT
பாகல்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட தொப்பூர் அருகே பாகல்பட்டியை சேர்ந்தவர் மணிவண்ணன் கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தொப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்