குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் தொழிலாளியின் பற்கள் உடைப்பு
பூதப்பாண்டியில் மது குடிக்க பணம் தர மறுத்தவரை தாக்கி பற்களை உடைத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Update: 2024-03-19 02:48 GMT
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள ஈசாந்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன். தொழிலாளியான இவர் நேற்று பிற்பகல் சுமார் இரண்டு மணியளவில் துவரங்காடு பகுதியிலுள்ள டாஸ்மார்க் அருகே உள்ள ஒரு கோழி கடையில் வீட்டிற்க்கு தேவையான கோழி கறி வாங்க சென்றார். அப்போது காட்டுபுதுர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த காளி என்ற காளிதாசன் (35) என்பவர் பத்மநாபனிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். பத்மநாபன் பணம் கொடுக்க மறுத்ததால் காளி தகாத வார்த்தையால் பேசி கையால் பத்மனாபன் முகத்தில் தாக்கியுள்ளார். இதில் இவருடைய நான்கு பற்கள் உடைந்தது. மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக பத்மநாபன் கொடுத்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் காளிதாசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.