கிரீன் பார்க் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
Update: 2024-06-07 07:47 GMT
மரக்கன்று நடவு
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் சுவதிகா கலந்துகொண்டு, மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம், உலக வெப்பமயமாதல், இயற்கைளை பாதுகாப்பதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து பள்ளி முதல்வர் வசந்தராஜா பணியாளர்களுக்கு இலவச மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கினார்