உலக சுற்றுச்சூழல் தினம் - மரக்கன்றுகளை நட்டு வைத்த எம்.எல்.ஏ
லால்குடி அருகே குமுளூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.;
Update: 2024-06-07 06:59 GMT
மரக்கன்றுகள் நடவு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை துவக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் ,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.