மேட்டூரில் உலக வன நாள் விழா !
சேலம் மாவட்டம்,மேட்டூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வனத்துறை சார்பில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-21 11:23 GMT
உலக வன நாள் விழா
சேலம் மாவட்டம்,மேட்டூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வனத்துறை சார்பில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ஆம் தேதி சர்வதேச வன நாள் விழா கடைபிடிக்கப்படுகிறது .அதன்படி மேட்டூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வனத்துறை சார்பில் இன்று வன நாள் விழா கொண்டாடபட்டது.மேட்டூர் வனசரகர் சிவானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் மரம் நடுவதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ரேணுகாதேவி, வனவர்கள் ஜெயக்குமார், ராஜேஷ் ,மாரியப்பன், வனக்காப்பாளர்கள் பத்ரன், விமல் ராஜ், கோகுல கண்ணன் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.