உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் அன்னதானம்
வரும் 28 தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிரவாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-26 10:41 GMT
நடிகர் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் வெளிளியிட்டுள்ள அறிக்கையில் பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி உலகப் பட்டினி தினமான, வருகிற 28.05.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் மாவட்ட,
அணி, நகரம், ஒன்றியம், கிளை, மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.