உலக சாதனை நிகழ்ச்சி

தந்தையர் தினத்தை முன்னிட்டு ஃபெமி -9 நடத்தும் நோபல் (Noble) உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-06-16 14:31 GMT

தந்தையர் தினத்தை முன்னிட்டு ஃபெமி -9 நடத்தும் நோபல் (Noble) உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.


ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி வளாகத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு ஃபெமி-9 நடத்தும் மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு உருவப்படம் வரையும் உலக சாதனை நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம் SP ஜவஹர் DSP அமிர்த்த வர்ஷினி பவானி, மகப்பேறு மருத்துவர் டாக்டர் மகாலட்சுமி,ஈரோடு மற்றும் நோபல் உலக சாதனை புத்தகத்தின் இயக்குநர் முனைவர் ஹேமலதா மற்றும் வேளாளர் கல்வி குழுமத்தினர் ஆகியோர் விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொண்டு துவக்கி வைத்தனர்.

இவ்விழாவில் வேளாளர் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, மணியன் மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில் குமரன் மற்றும் ஈரோட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலர் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஈரோட்டை சார்ந்த 100 தந்தையர்கள், 1000 சதுர அடியில், 3000 மாதவிடாய் சுகாதார நாப்கின்கள் வைத்து விழிப்புணர்வு உருவப்படத்தை உருவாக்கினர். இந்த நிகழ்வு இடம் பிடித்ததை நோபல் (Noble)உலக சாதனை புத்தகத்தின் தீர்ப்பார்கள் முனைவர். சிட்டுகலா ஜென்சிங் ஜோ மற்றும் வினோதினி மேற்பார்வையிட்டு உறுதிபடுத்தினர்.

இந்நிகழுவுக்கான சான்றிதழ் & பதக்கத்தை நோபல் (Noble) உலக சாதனை புத்தகத்தின் இயக்குநர் முனைவர் R.ஹேமலதா ஃபெமி-9 நிறுவனத்தின் உரிமையாளர் முனைவர் கோமதிக்கு வழங்கினார். இவ்விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள மகளிர்களுக்கு ஆண்களால் தந்தையர் தினத்தை முன்னிட்டு 5000 மாதவிடாய் சுகாதார நாப்கின்கள் ஃபெமி நிறுவனம் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News