உலக கடற்பசு நாள் விழிப்புணர்வு ஓவியப் போட்டி

தஞ்சாவூரில் உலக கடற்பசு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

Update: 2024-05-29 15:07 GMT

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள மாவட்ட வன அலுவலகத்தில் உலக கடற்பசு நாள் விழிப்புணர்வு ஓவியப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 50 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கடல் பசு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் வரைய தலைப்புகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.  இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  முதல் பரிசாக ரூ.5 ஆயிரத்தையும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரத்தையும், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரத்தையும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

இதில், முதல் பரிசை சென்னை அரும்பாக்கம் அரசுப் பள்ளி மாணவி மு. ஓவியா, இரண்டாம் பரிசுகளை தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி மாணவி டி. தரணி, தஞ்சாவூர் லிட்டில் ஸ்காலர்ஸ் பள்ளி மாணவர் தி.சஞ்சீவ், மூன்றாம் பரிசுகளை தஞ்சாவூர் ப்ளாசம் பப்ளிக் பள்ளி மாணவி வ.ஷ்றாவணி, தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவி சு.ஷிவஸ்ரீ,  அ.வீரையா வாண்டையார் நினைவு திரு. புட்பம் கல்லூரி மாணவர்கள்  உ.சரண்ராஜ், இ.ரகுணா ஆகியோர் பெற்றனர். மேலும், பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், தஞ்சாவூர் வனச் சரக அலுவலர் க.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News