தாமிரபரணியை பாதுகாக்க சபதம் ஏற்க எழுத்தாளர் வேண்டுகோள்
தாமிரபரணியை பாதுகாக்க சபதம் ஏற்க எழுத்தாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-28 13:18 GMT
எழுத்தாளர்
நெல்லை மாநகர தூய சவேரியார் கல்வியியல் கல்லூரியில் தமிழ்,வரலாறு மற்றும் கணினி துறை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நடத்திய இலக்கிய மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் முத்தாலக்குறிச்சி காமராசு பங்கேற்றார்.
அவர் பேசுகையில் தாமிரபரணியை பாதுகாக்க பயிற்சி ஆசிரியர்கள் சபதம் ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள்,மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.