தவறான சிகிச்சை சிறுவன் பலி: அரசு மருத்துவமனை மீது குற்றச்சாட்டு!
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் தவறான சிகிச்சை சிறுவன் பலி: அரசு மருத்துவமனை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது
தூத்துக்குடி அண்ணா நகர் 5வது தெருவை சார்ந்தவர் கருப்பசாமி, இவரது மனைவி மகேஸ்வரி இவர்களது ஒன்பது வயது மகன் முத்து மணிகண்டன் நாலாம் வகுப்பு படித்து வருகிறார் , கடந்த ஜனவரி 17ஆம் தேதி முத்து மணிகண்டனுக்கு காலை 6.30 மணி அளவில் வயிற்று வலி காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.இதைத்தொடர்ந்து அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்தம் ஏற்ற வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் எந்த ரத்த பரிசோதனையும் செய்யாமல் பெற்றோர்களிடம் அனுமதி கேட்காமல் ரத்தத்தை ஏற்றியவுடன் முத்து மணிகண்டன் வயிற்று வலியால் பயங்கரமாக துடிதுடித்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் சிறிது நேரத்தில் பரிதாபமாக சிறுவன் முத்து மணிகண்டன் இறந்துள்ளான் இதை அடுத்து உடனடியாக அரசு மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்து உள்ளனர்
மேலும் சிறுவன் மரணத்திற்கான காரணம் குறித்து எந்தவித அறிக்கையும் மருத்துவர்களால் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது இதைத் தொடர்ந்து உயிரிழந்த முத்து மணிகண்டன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் படிப்பறிவு இல்லாத தங்களை அரசு மருத்துவர்கள் ஏமாற்றி அனுப்பி வைத்து விட்டதாகவும் இதன் காரணமாக தனது மகனை உடலை அடக்கம் செய்து விட்டோம் இதுபோன்று வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது என கூறி தனது மகன் இறப்புக்கு காரணமான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.