திமுகவின் தேர்தல் அறிக்கை 2021ன் ஜெராக்ஸ்- ராஜேந்திர பாலாஜி அதிரடி
திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியின் ஜெராக்ஸ் தான் 2024ல் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். _தொடர்ந்து, பேசுகையில்._ அதிமுகவிற்கு இருக்கின்ற செல்வாக்கில் வெற்றி வாய்ப்பு தேமுதிக வேட்பாளர் விஜய் பிரபாகரனுக்கு பிரகாசமாக உள்ளது. தேமுதிகவில் விஜய்பிரபாகரனுக்கு மரியாதை உள்ளது., விஜயகாந்த் மீது அனுதாபம் உள்ளது. எம்ஜிஆர் வழியில் ஏழை எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வரலாறு உள்ளது. விஜய்பிரபாகரன் தகப்பனை இழந்தவர்., அவர் இன்றைக்கு விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். விஜயகாந்த் சேவையும் அதிமுக தொண்டர்களின் உழைப்பும்., ஏழை எளிய மக்களுக்கு அதிமுக வழங்கிய தொண்டும் ஆட்சியும் மக்களிடம் எடுத்துச் சொல்லி விஜயபிரபாகரன் வெற்றி பெறுவார். _கடந்த முறை மோடிய எங்கள் டாடி என்று கூறினீர்கள் இப்போது எதிர்த்து நிற்கிறீர்கள்
என்ற செய்தியாளர் கேள்விக்கு.?_ எங்கள் எதிரி திமுக தான்.! அதிமுகவுக்கும், திமுகவிற்கும் தான் போட்டி. திமுக கூட்டணியில் வேட்பாளர் விருதுநகரில் போட்டியிடுகிறார்., அதிமுக கூட்டணியில் விஜய் பிரபாகரன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஒரு இளைஞர்., படித்தவர் பண்பாளர் குடும்பத்தில் வந்தவர் விஜயகாந்துக்கு நல்ல மரியாதை செல்வாக்கு உள்ளது. அதனால் அதிமுகவின் கூட்டணியில் உள்ள அனைத்து பல்வேறு சமுதாய அமைப்புகளின் ஆதரவில் வலுவான கூட்டணி உள்ளதால் வெற்றி பெறுவார். எங்களுடைய வேட்பாளர் உடைய பலம் பலவீனம் என்பதெல்லாம் நாங்கள் பார்க்க மாட்டோம்.? களம் என்று வந்துவிட்டால் அதிமுக காரர்கள் வேகமாக சுழன்று கொண்டு பணியாற்றுவார்கள். விருதுநகரில் விஜய பிரபாகரன் வெற்றி பெறுவார். இராமநாதபுரத்தில் ஜெயபெருமாள் வெற்றி பெறுவார்.
தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி வெற்றி பெறுவார். இந்த விடியா திமுக ஆட்சியின் மீது அந்த அளவு மக்கள் மனதில் நீங்காத கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி விண்ணை முட்டுகின்ற அளவு உயர்ந்துள்ளது., வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்வு. மக்களிடத்தில் எதைச் சொல்லி.? எந்த சாதனையை சொல்லி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வாக்கு சேகரிக்கும் என கேள்வி எழுப்பினார். ஆகவே., அதிமுக வீடு வீடாக கிராமம் தோறும் சென்று வாக்கு சேகரிப்போம்., அதிமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள வேட்பாளர்கள் 40 பேரும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றால் தான் தமிழகத்தில் உள்ள முல்லைப் பெரியாறு, காவேரி, பாலாறு பிரச்சனைகளை தீர்க்க முடியும். காவேரி பிரச்சினையில் தட்டி கேட்க தைரியம் இல்லாமல் முதல்வர் உள்ளார். அதை தட்டிக் கேட்கும் அதிகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.
அதிமுக தேர்தல் அறிக்கை 20 நாட்களுக்கு முன்பே அதனை தயார் செய்து பொதுச்செயலாளர் எடப்பாடி வைத்திருந்தார். திமுக தேர்தல் அறிக்கைக்கு பிறகு வெளியிட்டதால் அப்படி கூறுகிறார்கள். 2021 சட்டமன்ற தேர்தலின் திமுகவின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியின் ஜெராக்ஸ் தான் 2024 திமுகவின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை. புதிய அறிக்கை ஒன்றுமில்லை.! நாடாளுமன்றத்தில் பிரதமராக வரக்கூடியவர்கள் செய்வதை திமுக தலைவர் சொல்லி இருக்கிறார்கள். ஆனால்., அதிமுக வலியுறுத்துவோம்.! அறிவுறுத்துவோம்.! கேட்டுப் பெறுவோம்.! என்று தான் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறது. அதிமுக போராடுவோம் என்று சொன்னாலே நிச்சயம் வெற்றி பெறுவோம்.!
அந்த அளவு நாடாளுமன்றத்தில் வலிமையாக போராடக் கூடியவர்கள் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள். விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடக் கூடிய விஜயகாந்தின் புதல்வர் விஜய் பிரபாகரன் ஒன்னரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதிமுகவோ., கூட்டணியோ யார் வேட்பாளர்கள் என அதிமுக நிர்வாகிகள் பார்க்க மாட்டார்கள். தலைமை அறிவித்து விட்டால் அதிமுக தொண்டர்கள் சுழன்று கொண்டு தேர்தல் பணியாற்றுவார்கள் அப்படிப்பட்ட அருமையான தொண்டர்களை எம்.ஜி.ஆர் விதைத்து விட்டு சென்றிருக்கிறார். அதிமுக வெல்லும் பாராளுமன்றத்தில் எடப்பாடி கரம் ஓங்கும் தமிழ்நாட்டினுடைய மானம் காக்கப்பட வேண்டும் என்றால் அதிமுக கூட்டணி வெல்ல வேண்டும். _கடந்த 2 மாதத்தில் அமலாக்க துறையால் இரு மாநில முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற கேள்விக்கு.?_ முதல்வர்கள் கைது செய்யப்பட்டது குறித்து அமலாக்கத்துறை உரிய விளக்கம் கொடுத்துள்ளது எனதெரிவித்தார். _
அதற்கு செய்தியாளர்கள் திமுக போன்ற எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதால் பாஜக அமலாக்க துறையை தவறாக பயன்படுத்துகிறது என்று கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு.?_ ஊரில் கொலை விழுந்தால் கொலையாளியை கைது செய்யக்கூடாதா என்று பதில் கூறினார். _பழைய வழக்கு என செய்தியாளர் கூறியதற்கு.?_ பழைய வழக்கோ புதிய வழக்கோ அதற்கு நீதிமன்றம் தான் தீர்ப்பளிக்க வேண்டும் என கூற _செய்தியாளர்கள் அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை சரியா என செய்தியாளர் கேள்விக்கு.?_ உடனே முன்னால் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அரவிந்த் எதிர்பால் கைது செய்யப்பட்டது சரி என நான் கூறவில்லை., இன்று விசாரணை வருகிறது அதை நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்.
விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை மேற்கொண்டதற்கு அவருடைய தந்தை பகிரங்கமாக எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அவருக்கு ஏற்கனவே சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது அவர் செல்லவில்லை அதனால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என கிண்டல் அடித்தார்.