மல்லிகை நத்தம் விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா!

புதுப்பட்டி ஊராட்சியில்மல்லிகை நத்தம் விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா.

Update: 2024-03-15 06:07 GMT

மல்லிகை நத்தம் விநாயகர்

புதுகோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள மல்லிகை நத்தம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் ஊருணி குளகரையிலுள்ள செல்வ விநாயகர் கோயில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. இக்கோயிலில் விநாயகருக்கு இருபுறமும் ராகு-கேது உள்ளது சிறப்பாகும். இந்த கோயில் ராகு- கேது தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம்,திருமண தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து 11 வாரம் நல்லெண்ணெய் ஊற்றி மண் விளக்கில் தீபம் ஏற்றினால் தோஷ நிவர்த்தி பெறுவதாக ஐதீகம். வருடாபிஷேக விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News