ஆத்தூரில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி

ஆத்தூர் நீதிமன்றத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-06-21 08:57 GMT

யோகா பயிற்சியில் ஈடுபட்டவர்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒருகிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் பதஞ்சலி யோகா பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆட்சியாளர் நடராஜ் உலக யோகா தின பயிற்சி காலை 7:30 மணி தொடங்கி எட்டு மணி வரை நடைபெற்ற யோகா பயிற்சியில்,

சூரிய நமஸ்காரம் ,மூச்சுப் பயிற்சி, பத்மாசனம்,உட்கட்ட ஆசனம் , கோண ஆசனம், பரிவர்த்த ஆசனம், முத்தரையாசனம் உள்ளிட்ட யோகாசனம் ஆசனப் பயிற்சி என இருபது வகையான பயிற்சிகள் செய்தனர். மேலும் இந்த யோகா பயிற்சியில் 1வது உரிமையில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முனுசாமி மற்றும் நீதிமன்ற ஊழியர்களும், வழக்கறிஞர்களும் இந்த யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்.

இந்த யோகா பயிற்சியால் மன உளைச்சல் குறைந்து உடல் வலிமை பெறுவதாக நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

Similar News