ரெகுநாதபுரம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா நிகழ்ச்சி
ரெகுநாதபுரம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Update: 2024-06-24 07:01 GMT
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ரெகுநாதபுரம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் யோகா செய்துக் காட்டினர். இதில் யோகா பயிற்றுநர் பழனிசாமி, கல்லூரி என்.எஸ்.எஸ் அலுவலர் கோபால கிருஷ்ணன், விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.