அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம் !

Update: 2024-05-13 11:58 GMT

தொழிற்பயிற்சி நிலையம் 

தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கும், கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ்-1 மற்றும் பிளஸ்2 தேர்ச்சி/தோல்வி அல்லது ஏதாவது ஒரு டிகிரி/டிப்ளமோ பெற்ற மாணவர், மாணவியர்களுக்கான சேர்க்கை நடைபெறுகிறது 10.05.2024 முதல் 07.06.2024 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாமக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையமானது அகில இந்திய அளவில் 12-வது இடத்திலும் தமிழ்நாட்டில் 5-வது இடமும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் அரசு ஐ.டி.ஐ-ல் இரண்டு ஆண்டு பயிற்சிகளான எலக்ட்ரீசியன் (Electrician), டிராப்ட்ஸ்மேன் (சிவில்) (Draughtsman Civil), மெஷினிஸ்ட் (Machinist) - (இருபாலர்) & ஓராண்டு பயிற்சியாக மெக்கானிக் ஆட்டோபாடிரிப்பேர் (இருபாலர்) பெண்களுக்கு மட்டும் ஓராண்டு பயிற்சியாக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் & புரோகிராமிங் அசிஸ்டென்ட் (COPA), ஈராண்டு பயிற்சியாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு சாதனங்கள் பராமரிப்பு (ICTSM) பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் 2023 ஆண்டில் புதிதாக துவங்கப்பட்டுள்ள Industry 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்பிரிவுகளான (இருபாலர்) மெக்கானிக் Electric Vehicle (கம்மியர் மின்சார வாகனம்) – ஈராண்டு, Industrial Robotics and டிஜிட்டல் Manufacturing Technician (தொழிற்துறை ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில் நுட்ப வல்லுநர்கள்) – ஓராண்டு, Advanced CNC Machining டெச்னிசிங் (மேம்பட்டCNC இயந்திர தொழில்நுட்ப வல்லுநர்கள்) -ஈராண்டு (இருபாலர்) போன்ற தொழிற்பிரிவுகளுக்கு பயிற்சிகள்அளிக்கப்பட உள்ளது. மேலும் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சியின் போது OJT (On The சோப் Training), Internship Training & Industrial Visit வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்த பின் Campus Interview (வளாக நேர்காணல்) மூலமாக 100% வேலை வாய்ப்பு பெறலாம். மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ/மாணவியர்களுக்கு பயிற்சிக்காலத்தில் பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம், மாதம் ரூ.750/- உதவித்தொகையுடன் விலையில்லா மிதிவண்டி, பாட புத்தகங்கள், சீருடை, காலணி, வரைபடக்கருவிகள் மற்றும் இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன.

மேலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000/-மாதந்தோறும் வழங்கப்படும் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த ஆண் பயிற்சியாளர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1,000/-மாதந்தோறும் வழங்கப்படும் 10-ஆம் வகுப்புடன் இரண்டாண்டு ஐ.டி.ஐ பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிகளில் சேர www.skilltraining.tn.gov.in என்ற ஆன்லைன் மூலமாகவும் அல்லது நாமக்கல் அரசு ஐ.டி.ஐ மற்றும் கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ நிலையத்திற்கு நேரில் வருகை புரியும் போது விண்ணப்பக் கட்டணமாகரூ.50/-ஐ செலுத்தி 07.06.2024- க்குள்விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பிக்க 10 –ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021-ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் 10-ஆம்வகுப்பு முடித்திருப்பின் 9-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்), மாற்றுச்சான்றிதழ் (TC), சாதி சான்றிதழ் (Community Certificate), ஆதார் அட்டை மற்றும் Passport Size Photo – 5 எண்ணிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. மேலும் விவரங்களுக்கு 04286-299597, 04286-267876, 94990 55844 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News