காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

முகநூலில் பழகி காதலித்து திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-06-06 15:26 GMT

கோப்பு படம்

சேலம் சூரமங்கலம் அய்யம்பெருமாம்பட்டியை சேர்ந்தவர் சந்துரு (25).வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், புதுச்சேரியை சேர்ந்த ஜீவாவுக்கும் இடையே பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.

கடந்த 3 ஆண்டுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சந்துரு தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை ஜீவா கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisement

இந்நிலையில், 4ம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த ஜீவா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் சேலம் ஆர்டிஓ விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News