இளம்பெண் தீ குளித்து தற்கொலை
ஈத்தாமொழி அருகே மன நலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
By : King 24x7 Angel
Update: 2024-01-30 10:21 GMT
இளம்பெண் தீ குளித்து தற்கொலை
குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புது குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜன் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (32). இவர்களுக்கு 12 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். கடந்த சில வருடங்களாக சரண்யா சற்று மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தார் என கூறப்படுகிறது. நேற்று பிள்ளைகளும் சரண்யாவும் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது பிள்ளைகள் வீட்டின் வெளியே நின்று நீண்ட நேரம் தண்ணீரில் குளித்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டில் வந்த பிள்ளைகள் அம்மா அடிப்பார் என்று எண்ணி ஒரு அறையில் உள்ளே சென்று கதவை சாத்தியுள்ளனர். நீண்ட நேரமாக சரண்யா கதவைத் தட்டியும் பிள்ளைகள் கதவை திறக்கவில்லை. உடனடியாக சரண்யா வீட்டின் வெளியே கேனில் இருந்த டீசலை எடுத்து தனக்குத்தானே ஊற்றி தீ வைத்துக் கொண்டார். குழந்தைகள் தாய் தீயில் எரிவதைக் கண்டு அலறினர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரண்யா இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.