அருமனை பகுதியில் இளம்பெண் மர்ம சாவு
கன்னியாகுமரி அருகே இளம்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
அருமனை பகுதியில் இளம்பெண் மர்ம சாவு
கன்னியாகுமரி - கேரளா எல்லை பகுதியான காட்டாக்கடை பகுதியை சேர்ந்தவர் ஸ்டெல்லா மேரி (26). இவர் கல்லூரியில் படித்த போது குமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்த லால் என்பவருடன் காதல் ஏற்பட்டு, இதில் கர்ப்பமாகி உள்ளார். ஆனால் அதிகாரப்பூர்வ திருமணமாகாமல் போலீஸ் நிலையத்தில் பேசி முடிவு எடுத்து காதலன் வீட்டில் வந்து வசித்து வந்தார். தற்போது ஸ்டெல்லா மேரிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வரதட்சணை சம்பந்தமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி காலை லால் தனது மனைவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாக உறவினர்களுடன் கூறியுள்ளார். உறவினர்கள் ஸ்டெல்லாமேரியை தொடர்பு கொண்ட போது தான் விஷம் குடித்ததாக கூறியுள்ளார். இதற்கிடையே ஸ்டெல்லா நேற்று ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். மேரியின் பெற்றோர் அவரது சாவில் மர்மம் உள்ளதாகவும், அவரது உடலில் பல இடங்களில் காயம் உள்ளதாகவும் அருமனை போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்டெல்லா மேரியின் உடல் இன்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரத பரிசோதனை நடத்தப்படுகிறது.