சேலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

சேலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-06-07 10:20 GMT

தற்கொலை 

சேலம் அய்யம் பெருமாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்துரு (வயது 25). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு புதுச்சேரியை சேர்ந்த ஜீவா என்பவருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அடிக்கடி பேசி வந்தனர். இது நாளடைவில் காதலாக மாறியது.

இதனை தொடர்ந்து காதல் ஜோடி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சந்துரு தொடர்ந்து முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இதை ஜீவா கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. விசாரணை இதற்கிடையே கடந்த 4-ந் தேதி கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த ஜீவா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜீவாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுதொடர்பாக சேலம் உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News