மாணவியை ஏமாற்றிய வாலிபர் கைது
நல்லம்பள்ளி அருகே மாதேமங்கலத்தில் திருமணம் செய்வதாக கூறி மாணவியை ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Update: 2024-05-23 01:41 GMT
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட மாதேமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சூரியபிரகாஷ் . இவர் எம்ஏ, பிஎட் படித்து முடித்து, தர்மபுரியில் மொபைல் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது முதலாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவியை காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகூறி, உல்லாசமாக இருந்தார். ஏற்காடு, மேட்டூர், தர்மபுரி பூங்கா என்று சுற்றினர்.
இந்நிலையில் திருமணம் செய்து கொள்ள சூரியபிரகாஷ் மறுத்து விட்டார். இதையடுத்து கல்லூரி மாணவி தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பட்டதாரி வாலிபர் சூரியபிரகாசை, நேற்று கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.