கடலூர் அருகே பெண்ணை கொலை செய்த இளைஞர் கைது
கடலூர் அருகே பெண்ணை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-25 11:03 GMT
காவல் நிலையம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் புலியூா் கிராமத்தைச் சோ்ந்த வீரமணியின் மனைவி இன்பவள்ளி கரும்பு தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பலாப்பட்டை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் திருமூா்த்தி இன்பவள்ளியை கொலை செய்து நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.