மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது
அரூரில் அத்துமீறி மதுபாட்டில்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2023-12-29 09:31 GMT
பைல் படம்
மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது இருசக்கர வாகனம் பறிமுதல் அரூர், டிச.29: அரூர் போலீஸ் எஸ்ஐ சக்திவேல் தலைமையிலான போலீசார், நான்கு ரோடு சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில்,வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அவர் 35 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரித்ததில்,அரூர் நகரைச் சேர்ந்த தினேஷ் (23) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தினேஷ் என்பரை கைது செய்து, அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.