தொழில் போட்டியில் கொலை மிரட்டல் வாலிபர் கைது

சாத்தான்குளம் அருகே தொழில் போட்டியில் சவுண்ட் சர்வீஸ் உரிமையாளருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-16 11:18 GMT

கைது

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் கீழத்தெருவை சேர்ந்தவர் அய்யாக்குட்டி மகன் முனீஸ்வரன்(28). இவர் அதே பகுதியில் ஒலி பெருக்கி வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருகிறார். இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த வீரமணி மகன் மாயாண்டி (22) என்பவரும் இதே தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இருவருக்கும் தொழில் போட்டி காரணமாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் முனீஸ்வரன் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த மாயாண்டி, முனீஸ்வரை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முனீஸ்வரன் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் வழக்குபதிவு செய்து மாயாண்டியை கைது செய்தார். உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News