குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
அரக்கோணத்தில் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த வாலிபரை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.;
Update: 2024-06-22 05:53 GMT
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட அரக்கோணம் அருகே பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் (34) என்பவரை அரக்கோணம் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பழனிவேல் கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும், இவரது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சரவணனை ஒரு ஆண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்க கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார். இதனையடுத்து சரவணனை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.