வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
எஸ் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை மாநகரில் கொலை கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் அவர்களின் உத்தரவின் பேரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாநகர் பகுதிகளில் காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபட்டு குற்ற செயல்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை ஆனையூர் எஸ் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவருடைய மகன் பிரேம்குமார் (வயது 39). மதுரை மாநகரில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார். எனவே இவருடைய அத்தகைய சட்டவிரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் பிரேம்குமார் இன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.